நம் பாரம்பரிய அரிசி வகைகள்!

Apr 10 , 2020

நம் பாரம்பரிய அரிசி வகைகள்!

அரிசி என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், அது முற்றிலும் உண்மை அல்ல.  நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசி பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவாக உண்ணுகிறோம்.

நாம் சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்காமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. மிகவும் முக்கியமான ரகங்களான, கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி. இவைகள் எல்லாம் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பரிய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பரிய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

Shop.TorontoTamil.com உங்களுக்காக முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக உள்ள அரிசியையும் எமது தளத்தில் விற்பனைக்கு இணைத்துள்ளோம்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள்.

 

    • மாப்பிள்ளை சம்பா
    • கருப்பு கவுனி
    • குடவாழை
    • துளசிவாச சீரகச்சம்பா
    • கண்டசாலி
    • கைவரச்சம்பா
    • வாடன் சம்பா
    • தேங்காய்பூச் சம்பா
    • வாலான்
    • சிங்கினிகார்
    • பூங்கார்
    • ராஜமன்னார்
    • பவானி
    • சம்பா மோசனம்
    • செம்பாளை
    • கொட்டாரச் சம்பா
    • ராஜயோகம்